• Oct 30 2024

இதற்காக தான் இந்து மத பையனை திருமணம் செய்தேன்... வெளிப்படையாக கூறிய செம்பருத்தி சீரியல் நடிகை- ஷபானா

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி என்ற சீரியல் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் செல்லப்பிள்ளையாக வளம் வந்தவர் நடிகை ஷபானா. அந்த சீரியல் 1000 எபிசோடுகளுக்கு மேல் ஓடி வெற்றிகரமாக முடிந்தும்விட்டது. 


இந்த தொடரை முடித்த கையோடு நடிகை ஷபானா அடுத்த தொடரான சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிஸ்டர் மனைவி என்ற தொடரில் நடித்து வருகிறார் .இவர் பாக்கியலட்சுமி தொடர் ஆரம்பத்தில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்துவந்த ஆர்யனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.


திருமணத்திற்கு பின் இருவரும் இணைந்து நடித்து வரும் சீரியல் தான் மிஸ்டர் மனைவி  ஆனால் இத்தொடர் TRP பெறவில்லை . அண்மையில் ஒரு பேட்டியில் நடிகை ஷபானா பேசும்போது, செம்பருத்தி சீரியலில் இந்து பெண்ணாக நடித்ததற்காகவும், பொட்டு வைத்துக் கொண்டதற்காகவும் என்னுடைய குடும்பத்தினர் ஒரு ஆண்டுகாலம் என்னுடன் பேசவில்லை.


இந்துப் பையனை திருமணம் செய்யக் கூடாது என்று அவர்கள் தொடர்ந்து அறிவுறுத்திய நிலையில், அதற்காகவே தான் ஒரு இந்து பையனை திருமணம் செய்துக் கொள்ள முடிவெடுத்ததாகவும் ஆர்யனை காதலித்து கல்யாணம் செய்துக் கொண்டதாகவும் ஷபானா தெரிவித்துள்ளார்.

Advertisement