• Jan 19 2025

ராஷ்மிகாவுக்கு விரைவில் டும்.. டும்.. டும்மா..? திருமணத்தை ரகசியமாக உறுதி செய்த ட்விட்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தென்னிந்தியாவில் முக்கிய நடிகையாக திகழ்பவர் தான் நடிகை  ராஷ்மிகா மந்தாரா. தற்போது இவர் ஹிந்தி, தமிழ் என்று பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.

அண்மையில் இவர் நடிப்பில் வெளியான அனிமல் திரைப்படம் பல்வேறு விமர்சனங்களுக்கு உட்பட்ட  போதிலும், பலநூறு கோடிக்கணக்கில் வசூலை அள்ளியது.

இந்த படத்தில் நடித்ததன் மூலம் தனது பெயரை கெடுத்துக் கொண்ட ராஷ்மிகா, அடுத்தடுத்து நிறைய படங்களை கைவைசம் வைத்துள்ளார்.

அவர் தெலுங்கு பட நடிகரான விஜய் தேவர் கொண்டாவை காதலிப்பதாக கூறப்பட்ட விடயம் யாவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அவர்கள் இந்த செய்தியை இதுவரை மறுக்கவும் இல்லை, ஒப்புக் கொள்ளவும் இல்லை. இருப்பினும் அவர்கள் ஜோடியாக வெளிநாட்டுக்கு ட்ரிப் சென்று வருகிறார்கள்.


இதைத் தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் இந்த மாதம் திருமணம் நடக்க உள்ளது என்ற செய்தியும் தீயாக பரவியது.

இந்த நிலையில், நடிகை ராஷ்மிகா தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கு எப்படிப்பட்ட கணவர் வேண்டும் என்பதை பற்றி க்ளு குறிப்பிட்டுள்ளார். தற்போது அந்த பதிவு வைரல் ஆகியுள்ளது.

அதாவது, ராஷ்மிகாவின் ரசிகர் ஒருவர் பகிர்ந்த பதிவில் 'ராஷ்மிகாவுக்கு VD போல ஒரு கணவர் வேண்டும். Very Daring' என குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு ராஷ்மிகா, 'That’s very true' என பதில் அளித்திருக்கிறார். இதன் மூலம் விஜய் தேவர்கொண்டாவுடன் உள்ள காதலை மறைமுகமாக உறுதி செய்துள்ளார் ராஷ்மிகா.


Advertisement

Advertisement