• May 04 2024

''நா ரெடி தான் '' பாடலுக்கு கியூட்டா கிளாசிக்கல் டான்ஸ் ஆடிய ரம்யா..! தீயாய் வைரலாகி வரும் வீடியோ இதோ!

Jo / 9 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகிவரும் படம் லியோ. வரும் அக்டோபர் 19ம் தேதி ரிலீசாவுள்ள லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். 

 விஜய்யின் பிறந்தநாளையொட்டி படத்தின் போஸ்டர்கள் மற்றும் பர்ஸ்ட் சிங்கிள் ஆகியவை வெளியாகின. இவை அனைத்துமே ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளன. முன்னதாக வெளியான படத்தின் டைட்டில் டீசரும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. அனிருத் இசையமைத்துவரும் இந்தப் படத்தில் நா ரெடி என்ற படத்தின் முதல் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து அதிகமான வியூஸ்களை பெற்று வருகிறது.

இதனிடையே, ஏராளமான ரசிகர்கள், பிரபலங்கள், வெளிநாட்டினர் என வழக்கம்போல விஜய்யின் இந்தப் பாடலை ரீல்சாக வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது பிரபல விஜே ரம்யா சுப்ரமணியன் தனது தோழிகளுடன் இந்தப் பாடலின் ரீல்சை வெளியிட்டுள்ளார்.

 

முதலில் கிளாசிக்கல் நடனமாக துவங்கும் அவர்கள் தொடர்ந்து குத்து டான்சாக தங்களது நடனத்தை மாற்றுகின்றனர். அவரது இந்த நடனம் ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது.இந்த வீடியோ தற்போது செம வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement