• May 09 2024

சசிகுமாருக்கு கிடைத்த வெற்றி.. 'அயோத்தி' படத்தைப் பாராட்டிய ரஜினிகாந்த்.. வைரலாகும் பதிவு..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் சசிகுமார் நடிப்பில் இயக்குநர் அ.மந்திரமூர்த்தி இயக்கத்தில் வெளியான படம் 'அயோத்தி'. மார்ச் 3-ஆம் தேதி வெளிவந்த இப்படம் ஆனது முதல் நாளில் பெரிதளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. இருப்பினும் ஒரு சில நாட்களின் பின்னர் இப்படத்திற்கு கூட்டம் குவியத் தொடங்கியது.

 

இப்படத்தை ரசிகர்கள் மட்டுமல்லாது பல திரையுலக நட்சத்திரங்களும் பார்த்துவிட்டு பாராட்டு மழையை பொழிந்தனர். இதனையடுத்து கடந்த வாரம் 7ஆம் தேதி இப்படம் ஓடிடி தளத்தில் வெளிவந்தது.


இந்நிலையில் தற்போது படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் அயோத்தி படத்தையும், படக்குழுவையும் பாராட்டி ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அந்தவகையில் "அயோத்தி… நண்பர் சசிகுமாருக்கு ரொம்ப நாட்களுக்குப் பிறகு அருமையான கருத்துள்ள ஒரு வெற்றிப் படம். முதல் படத்திலேயே தான் ஒரு தலை சிறந்த இயக்குநர் என்று நிரூபித்திருக்கிறார் ஆர். மந்திரமூர்த்தி. தயாரிப்பாளருக்கு என்னுடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும்!" என குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement