• Sep 17 2025

கமலுடன் சேர்ந்து நடிக்க ஆசை.. அடுத்த படம் பற்றி ஓபன் டாக் கொடுத்த ரஜினி

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ்த்  திரையுலகில்  தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரை சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் அன்போடு அழைக்கின்றார்கள்.  தனது ஸ்டைலில் தனித்துவம் பெற்ற இவர்,  அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். 

அதன் பின் மூன்று  முடிச்சு படத்தில் பெரிதும் கவனிக்கப்பட்டார். ஆரம்பத்தில்  எதிர்மறையான கேரக்டர்களில் நடித்து வந்தார். அதன்பின்பு கவிக்குயில் என்ற படத்தில் மூலம் நாயகனாக அவதாரம் எடுத்தார். 

இதைத்தொடர்ந்து படிக்காதவன், தர்மத்தின் தலைவன், வேலைக்காரன், ராஜாதி ராஜா, அண்ணாமலை, தளபதி என 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.  தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து தனக்கான இடத்தை தக்க வைத்துள்ளார். 


லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான கூலி திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.  எனினும் வசூலில் சாதனை படைத்தது. தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகின்றார். 

இந்த நிலையில், கமலுடன் சேர்ந்து நடிக்க ஆசை.. நல்ல கதை. நல்ல கேரக்டர் கிடைத்தால் நிச்சயமாக சேர்ந்து நடிப்போம் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.  மேலும்  ராஜ்கமல் பிலிம்ஸ் ரெட் ஜெயன்ட் இணைந்து தயாரிக்கும் அடுத்த படத்தில் நடிப்பதாகவும் சூப்பர் அப்டேட் கொடுத்துள்ளார். 

Advertisement

Advertisement