• May 07 2024

தலையில் கேப், ரெட்ரோ லுக் என செம்ம மாஸாக ரசிகர்களைப் பார்க்க வந்த ரஜினிகாந்த்- வெளியாகிய லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 7 months ago

Advertisement

Listen News!

ஜெயிலர் படத்தின் ப்ளாக் பஸ்டர் ஹிட்டடித்ததைத் தொடர்ந்து இயக்குநர் த.செ ஞானவேல் இயக்கத்தில் லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் தனது 170 படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கின்றார். இந்தப் படத்தின் ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் பூஜையுடன் தொடங்கியது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் கலந்து கொண்டுள்ளார்.

இப்படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், மல்லுவுட் மாஸ் ஹீரோ ஃபஹத் பாசில், டோலிவுட் ஸ்டார் ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்தத் திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது.


மேலும், இந்தப் படத்தில் ரஜினியின் ஹேர்ஸ்டைல், லுக் அனைத்துமே ரொம்பவே இளமையாக இருந்தது. ஜெயிலர் கொடுத்த வெற்றியால், தலைவர் 170 படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில், தலைவர் 170 படத்திற்காக ரெட்ரோ லுக்கில் இருக்கும் ரஜினியின் போட்டோ வைரலாகி வருகிறது.

புதுச்சேரி சென்றிருந்த ரஜினியை பார்க்க அதிகளவில் ரசிகர்கள் திரண்டிருந்தனர். அப்போது அவர் காரில் இருந்தபடியே ரசிகர்களை பார்த்து கையெடுத்து கும்பிட்டார். அதேபோல், இப்போது தலைவர் 170 படத்திற்காக திருவனந்தபுரம் சென்றுள்ள ரஜினியை பார்க்க, ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்கள் அதிகளவில் குவிந்தனர். 


இதனால் வழக்கம்போல காரின் சன்ரூஃப் விண்டோ வழியாக எட்டிப் பார்த்த ரஜினி, ரசிகர்களுக்கு கையெடுத்து கும்பிட்டு வணக்கம் கூறினார். தலையில் கேப், ரெட்ரோ லுக் என செம்ம மாஸாக உள்ள ரஜினியின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றன. இன்னொரு வீடியோவில் ரஜினி ரசிகர்களை இரவு நேரத்தில் சந்தித்துள்ளார். இதுவும் தலைவர் 170 படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ தான் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement