• Mar 23 2023

இனிமேல் உன்னால மாத்த முடியாது என்று ரஜினி சொன்னாரு அது தான் நடந்திச்சு- மகாநதி சீரியல் சரவணன் கூறிய தகவல்

stella / 4 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கார்த்தி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு பல விருதுகளையும் பெற்ற திரைப்படம் தான் பருத்தி வீரன்.இப்படத்தில் சித்தப்பா என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபல்யமானவர் தான் சரவணன். இவர் இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்தாலும் இப்படம் கொடுத்த வரவேற்பு வேற லெவல் எனலாம்.

மேலும் இவர் தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மாநதி என்னும் சீரியலில் நடித்து வருகின்றார்.இந்த சீரியலில் இவர் நடித்து வரும் சந்தானம் என்னும் கதாப்பாத்திரமும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இந்த நிலையில் இவர் தற்பொழுது ஒரு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது


பருத்தி வீரன் படத்தை பார்த்திட்டு ரஜனி சேர் கிட்ட பேசலாம் என்று தியேட்டரில் நின்றோம். லேட் ஆனதால வீட்டுக்கு கிளம்பி போய்ட்டோம். இப்போ ரஜினி சேர் என்கிட்ட போஃன் பண்ணி பேசினாரு. ரஜினியின் தீவிர ரசிகனான எனக்கு அவரே போஃன் பண்ணி பேசினது பெரிய விஷயமாகவே இருந்தது.

பின்னர் அவர் சொன்னாரு நான் பரட்டை என்னும் காரெக்டரில் நடிச்சேன்.எல்லாருமே அப்பிடித்தான் என்னை கூப்பிடுறாங்க. என்னால அதை மாத்தவே முடில. அதே மாதிரி நீங்களும் சிக்கீட்டீங்க. இனிமேல் எல்லாரும் எங்களை சித்தப்பா என்று தான் அழைப்பாங்க பாருங்க என்றார். அவர்சொன்ன மாதிரியே இப்பவரைக்கும் என்னை சித்தப்பா என்று தான் கூப்பிடுறாங்க.80 வயது தாத்தா கூட என்னை சித்தப்பா என்று தான் சொல்லுறாரு. எவ்வளவு படம் நடிச்சாலும் அதை மாத்த முடில என்று கூறியிருக்கிறார்.


அதே போல 1996ல டி.ராஜேந்தர் என்னோட ஜோசியத்தைப் பார்த்து உனக்கு 45 வயதுக்கு மேலதான் சக்ஸஸ் வரும் என்றாரு. அது மாதிரி தான் நடந்திச்சு. நான் ஜோசியத்தை நம்புகிறேன் என்றும் தெரிவித்தார்.


Advertisement

Advertisement

Advertisement