• May 03 2024

ராகவா லாரன்ஸ் - சரத்குமார் இணைந்து மிரட்டும் 'ருத்ரன்'... படம் எப்படி இருக்கு..? ரசிகர்களின் ட்விட்டர் விமர்சனம் இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் ராகவா லாரன்ஸ், பிரியா பவானி ஷங்கர், பூர்ணிமா பாக்யராஜ், சரத்குமார் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்களின் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் ருத்ரன். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருக்கும் இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் கதிரேசன் இயக்கி இருக்கிறார். இப்படமானது இன்று வெளியாகி உள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். 


அந்தவகையில் படம் வேறலெவல்ல இருக்கு அதுவும் கிளைமேக்ஸ் சீனுக்காகவே இந்த படத்தை பார்க்கலாம். ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர் நல்லா நடிச்சிருக்காங்க என படத்தை பார்த்து விட்டு வெளியே வந்து கருத்து சொல்லும் ரசிகர்கள் மாஸ் படம் மிஸ் பண்ணிடாதீங்க என ருத்ரன் படத்தை புகழ்ந்து பேசி உள்ளனர்.


மேலும் ருத்ரன் படத்தின் FDFS கொண்டாட்டங்கள் தியேட்டர்களில் களைகட்டி உள்ளன. உலகம் முழுவதும் 1500 ஸ்க்ரீன்களில் இந்த படம் வெளியாகி உள்ள நிலையில், பிரபல தியேட்டர் ஒன்றில் அகோரிகள் போலவே ரசிகர்கள் வேடமணிந்து வந்து ஆட்டம் போட்டுள்ள வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன. இதன் மூலமாகவே இப்படம் மாஸ் என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது.


அதேபோன்று ராகவா லாரன்ஸ் தான் இந்த படத்தின் ஹீரோவாக இருந்தாலும், படத்தில் வரும் பகைமுடி பாடல் இரண்டாவது ஹீரோவாகவே உள்ளது. தாராளமாக தியேட்டரில் இந்த படத்தை பார்க்கலாம் எனவும்  நெட்டிசன் ஒருவர் விமர்சித்துள்ளார்.


அதுமட்டுமல்லாது ருத்ரன் படத்தின் கிளைமேக்ஸில் ருத்ரன் பார்ட் 2வுக்கான லீட் உடன் முடித்துள்ளதாகவும் நெட்டிசன்கள் படம் தீயாக இருப்பதாகவும் பதிவிட்டு வருகின்றனர். 

அதேநேரத்தில் இந்த படத்தின் உடைய சண்டைக் காட்சிகள் எல்லாம் பார்க்கும் போது பாலய்யா படமே தோற்றுவிடும் என்றும் தெலுங்கில் ருத்ரன் செம ஹிட் அடிக்கும் என்றும் கலாய்த்து வருகின்றனர்.


இவ்வாறாக ரசிகர்களின் உடைய கருத்துக்களை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது 'ருத்ரன்' படம் ஹிட் ஆகும் என்பது தெரிகின்றது. 

Advertisement

Advertisement

Advertisement