• Sep 27 2023

ராதிகா கொடுத்த ஷாக்..! இனியாவா..மயூவா..? கோபி எடுக்க போகும் முடிவு என்ன? Baakiyalakshmi Serial Promo...!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.

அந்த வகையில் புதிய சோதனை ஒன்று கோபிக்கு வர, மயூவா அல்லது மகள் இனியாவா? என்று முடிவெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.


இனியா கல்லூரி அசைன்மென்ட்டுக்காக கேரளா வரை தனியாக ட்ரிப் செல்ல உள்ளார். கோபி தான் இனியாவை கேரளா வரை அழைத்து செல்ல உள்ளார்.


இதற்காக இனியா பல ஆசைகளுடன் தயாராகி இருக்கும் நிலையில், ராதிகாவின் மகள் மயூ பெரிய மனுஷி ஆகிய விஷயத்தை ராதிகாவின் அம்மா கூற, ராதிகா உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளார். இதற்கான ஃபங்ஷன் நாளைக்கே செய்து விடமால் என முடிவு செய்துள்ள ராதிகா, கோபியிடம் என்ன வேலை இருந்தாலும் நாளைக்கு எதையும் செய்யாதீங்க என கூறுகிறார்.


இதற்கு கோபி பதறியபடி, அய்யய்யோ நாளைக்கு இனியாவுடைய கேரளா ட்ரிப் இருக்கு என கூறுகிறார். இதை கூறியதும் டென்க்ஷனான ராதிகா நீங்க இல்லாம நாங்க ஃபங்ஷன் பண்ணனுமா என கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். 


இந்த விஷயத்தில் கோபி மயூ தான் முக்கியம் என, மயூ ஃபங்க்ஷனில் கலந்து கொண்டு, மகள் இனியாவின் ஆசையினை நிறைவேற்ற மாட்டார் என்பது போலவே சீரியல் நகரும் என கூறப்படுகிறது. இதன் காரணமாக இனியா - கோபி இடையே பிரச்னையும் வெடிக்குமாம். சரி என்ன நடக்க போகிறது  பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement

Advertisement