• May 18 2024

ரச்சிதா, ஜனனி கூட ஜிபி முத்து போட்ட குத்தாட்டம்- அடுத்த விஜய் சேதுபதி நீ தான் தலைவரே

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியை பின்பற்றும் ரசிகர்கள் அதிகம் இருப்பதால், தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிற்குள் நடப்பது பற்றியும், போட்டியாளர்களின் செயல்பாடுகள் குறித்தும் ஏராளமான கருத்துக்கள் கூட இணையத்தில் அதிகம் பேசு பொருளாக மாறி வருகிறது.

இதனிடையே, தொடர்ந்து கலகலப்பாக இருந்து வந்த ஜிபி முத்து திடீரென பிக்பாஸ் வீட்டை விட்டு போக வேண்டும் என அழுது புலம்பி கொண்டிருப்பது தொடர்பான விஷயம், போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் அதிகம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதன் பின்னர், பிக்பாஸ் கூட ஜிபி முத்துவை Confession ரூமுக்குள் அழைத்து சமரசம் செய்திருந்தது. இதன் பின்னர், தனது நிலையில் இருந்து மீண்டு வந்துள்ள ஜிபி முத்து, முன்பு போல போட்டியாளர்களிடம் சகஜமாக பழகி வருகிறார்.


இந்த நிலையில், தற்போது ஜிபி முத்து நடனமாடுவது தொடர்பான வீடியோ, இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.ரச்சிதா மற்றும் ஜனனி ஆகியோர், காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் வரும் "Two Two Two" பாடலுக்கு நடனமாடி கொண்டிருந்தனர். 

அந்த பாடலில் நடிகைகள் நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர், விஜய் சேதுபதியுடன் இணைந்து ஆடுவது போன்ற காட்சிகள் வரும். அதே போல, ரச்சிதா மற்றும் ஜனனி ஆடிக் கொண்டிருக்க, ஜிபி முத்துவை கீழே இறங்கி ரச்சிதா மேடையில் அழைத்து ஆடியுள்ளார். இது குறித்த வீடியோ வைரலாகி வருவதைக் காணலாம். 

Advertisement

Advertisement