• May 04 2024

புகைப்படத்துடன் குட் நியூஸ் சொன்ன ரச்சிதா..? குவியும் வாழ்த்துக்கள்...தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டீவியில் சில ஆண்டுகளுக்கு முன் ஒளிப்பரப்பாகி முடிந்த சீரியல்களில் ஒன்று 'சரவணன் மீனாட்சி'. இந்த சீரியலின் இரண்டாம் சீசனில் மீனாட்சியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. 

இந்த சீரியலில் கிடைத்த வரவேற்பால் தொடர்ந்து பல சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பினை பெற்றார்.

ரச்சிதாவின் குடும்ப வாழ்க்கையை எடுத்து நோக்கின் இவர் சில ஆண்டுகளுக்கு முன் தினேஷ் என்ற சீரியல் நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் இருவருக்கும் இடையில் சண்டைகள் ஏற்பட்டதால் தற்போது தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து இவருக்கு விஜய்டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்து அதில் பங்கு கொண்டு சிறப்பாக பங்கு பற்றி இருந்தார்.

இந்நிலையில் தற்போது புதுக்கார் ஒன்றை வாங்கி உள்ளார்.அதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிறே்றி உள்ளார்.


MG Hector காரை தான் அவர் வாங்கி இருக்கிறார். அதன் விலை சுமார் 26 லட்சம் ருபாய் இருக்கும் என தெரிகிறது. தற்போது ரச்சிதாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். 



Advertisement

Advertisement

Advertisement