• May 18 2024

காவல் நிலையத்திற்கு நேரில் சென்று ஷாலு ஷம்மு பரபரப்பு புகார்...நடந்தது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நண்பர்கள் மீதே போலீசில் நடிகை ஷாலு ஷம்மு அளித்திருக்கும் புகார் தற்போது சமூகவலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. போட்டோ ஷூட் மூலம் பிரபலமடைந்த பல நடிகைகள் மத்தியில் சமீப காலமாகவே இளசுகள் மத்தியில் சென்சேனாக இருந்து வருகிறார் நடிகை ஷாலு ஷம்மு. நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சூரியின் காமெடி கலாட்டாகள் நிறைந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.

மேலும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்த ஸ்ரீவித்தியாவுடன் படம் முழுவதும் தோழியாக நடித்தவர் தான் ஷாலு சம்மு. அத்தோடு வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்கு பின்னர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் நடித்திருந்தார். பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மிஸ்டர் லோக்கல் என்ற படத்திலும் ஷாலு நடித்திருந்தார். அத்தோடு, இவர் நடித்த படங்களை விட சமூக வலைதளத்திலும் படு ஆக்ட்டிவாக இருக்கிறார். இவர் பதிவிட்ட வீடியோக்கள் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

அதிலும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஷாலு தன் ஆண் நண்பர்களுடன் நடனமாடிய விடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது. அதற்கு பின்னரும் சில படங்களில் இவர் கமிட்டாக இருப்பதாக கூறப்படுகிறது. இவர் தான் அடிக்கடி எடுக்கும் போட்டோ ஷூட் புகைப்படம், ரில்ஸ் வீடியோ என எதையாவது சமூகவலைத்தளத்தில்  பகிர்ந்து கொண்டே வருகிறார். இதனால் ரசிகர்கள் பலரும் இவரை பாலோ செய்கிறார்கள். இந்த நிலையில் நடிகை ஷாலு சம்முவின் ஐபோன் திருடு போயிருக்கும் சம்பவம் சமூகவலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்திருக்கின்றது.

அதாவது, ஷாலு சம்மு புரசைவாக்கத்தில் வசித்து வருகிறார். அத்தோடு கடந்த ஜனவரி மாதம் தான் இவர் இரண்டு லட்ச ரூபாய் ஐபோன் ஒன்றை வாங்கி இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் கடந்த ஏப்ரல் ஒன்பதாம் தேதி ஈஸ்டர் பண்டிகையை தன் நண்பர்களுடன் எம்ஆர்சி நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஷாலு கொண்டாடி இருக்கிறார். பின் பார்ட்டியை முடித்துவிட்டு இரவு 2 மணிக்கு தன் நண்பர்களுடன் சூளைமேட்டில் உள்ள தன்னுடைய நண்பர் வீட்டிலேயே சாலு தங்கினார். அதற்குப்பின் அதிகாலை 10 மணிக்கு எழுந்து பார்த்தபோதுதான் இவருடைய iphone காணாமல் போயிருக்கிறது.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சம்மு நண்பர்களுடன் தங்கி இருந்த விடுதிக்கு சென்று பார்த்திக்கிறார். இதன் பின் அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து இருக்கிறார். பின் செல்போன் வாங்கிய ஷோரூம் என பல இடங்களில் தேடியிருக்கிறார். ஆனால், செல்போன் கிடைக்கவில்லை. இதனை அடுத்து ஷாலு கடந்த 11ஆம் தேதி தன்னுடைய செல்போன் காணவில்லை கண்டுபிடித்து தரவேண்டும் என்று பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருக்கிறார். போலீசார் செல்போனை எண்ணை வைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

அத்தோடு இந்த நிலையில் தன்னுடைய செல்போனை கண்டுபிடிக்க ஷாலு தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறார். குறிப்பாக செல்போனை மீட்கும் செயலியான ஐகிளவுட் மூலமாக தீவிரமாக தேடியிருக்கிறார். அப்போது சூளைமேட்டில் உள்ள தன்னுடைய நண்பர் வீட்டில் செல்போன் கடைசியாக இருந்ததை கண்டுபிடித்திருக்கிறார். இதனால் தனது நண்பர்களின் சிலரின் மீது சந்தேகம் இருப்பதாக ஷாலு மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். மேலும் இவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் ஷாலு நண்பர்களை அழைத்து விசாரணை நடத்த திட்டமிட்டு இருக்கிறது. மேலும்,, இதுகுறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் ‘நண்பன் மீதே இப்படி புகார் அளிப்பேன்னு நான் நினைக்கல’ என்று சோகத்துடன் பதிவிட்டுள்ளார்.


Advertisement

Advertisement