• May 12 2024

இன்று வெளியாகிறது 'PS 2' டிரைலர்.. அதுவும் எத்தனை மணிக்குத் தெரியுமா.. படக்குழு அறிவிப்பு..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

ராஜ ராஜ சோழனை பற்றி கல்கியினால் புனையப்பட்ட நாவலான 'பொன்னியின் செல்வன்' கதையை தழுவி மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் தான் 'பொன்னியின் செல்வன்'. 


இப்படத்தின் முதல் பாகமானது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அத்தோடு இப்படம் வசூலிலும் 500 கோடிக்கு மேல் பெற்று சாதனை படைத்தது வருகின்றது. 

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதனால் படக்குழு ப்ரமோஷன் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2-ஆம் பாகத்தின் உடைய டிரைலர் இன்று இரவு 9.30 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement