• May 09 2024

தனுஷின் வொன்டர்பார் நிறுவனத்திற்கு ஏற்பட்ட பிரச்சனை- கடும் கோபத்தில் ரசிகர்கள்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

துள்ளுவதோ இளமை எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிய தனுஷ் தற்போது பாலிவுட் ஹாலிவுட் என கலக்கி வருகின்றார்.இவர் ஒரு நடிகர் மட்டுமல்லாது இயக்குநர் ,தயாரிப்பாளர், பாடகர் ,பாடலாசிரியர் என பன்முகம் கொண்டவர்.

முதல் படத்தில் கடுமையான விமர்சனங்களை சந்தித்த தனுஷ் அதைப்பற்றி கவலைப்படாது நடிப்பில் மட்டுமே ஆர்வம் காட்டி வந்தார். எனினும் அதன் பலனாக காதல் கொண்டேன், திருடா திருடி, தேவதையை கண்டேன், பொல்லாதவன், படிக்காதவன், ஆடுகளம் என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உச்சத்தை தொட்டுள்ளார்.

தனது வொன்டர்பார் நிறுவனத்தின் மூலம் பல படங்களை தயாரித்துள்ளார், கடைசியாக மாரி 2 படத்தை தான் தயாரித்தார்.

பாலாஜி மோகன் இயக்கிய இப்படத்தில் தனுஷ் மற்றும் சாய் பல்லவி முதன்முறையாக ஜோடியாக நடித்தார்கள்.

அத்தோடு இந்த படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் யூடியூபில் பல சாதனைகளை செய்தது.

மேலும் இப்பாடல் யூடியூபில் 1.35 +B பார்வையாளர்களை பெற்று சாதனை லிஸ்டில் இருந்தது. ஆனால் தற்போது பாடலை யூடியூபில் சிலர் ஹேக் செய்துள்ளனர். அதைப்பார்த்த ரசிகர்கள் யாருடா அது என செம கோபத்தில் உள்ளார்கள்.

https://www.youtube.com/embed/kDpbkFdEuYc

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement