• Feb 14 2026

சிரிப்பாலே ரசிகர்களை கவரும் பிரியங்கா மோகன்.. இன்ஸ்டாவை தெறிக்கவிட்ட போட்டோஸ்.!

subiththira / 5 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்ட நடிகைகளில் முக்கியமானவர் பிரியங்கா மோகன். பார்ப்பதற்கு ஹோம்லியான தோற்றம், இயல்பான நடிப்பு மற்றும் சிரிப்பால் மனதை கொள்ளை கொள்ளும் முகபாவனை என பல காரணங்களால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.


சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரியங்கா மோகன். முதல் படமே பெரிய வெற்றி பெற்றதோடு, பிரியங்காவின் நடிப்பும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. கதாநாயகியாக அதிக காட்சிகள் இல்லாவிட்டாலும், தனது அழகான திரை தோற்றம் மற்றும் இயல்பான நடிப்பால் கவனம் ஈர்த்தார்.

‘டாக்டர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு பிரியங்கா மோகனுக்கு கிடைத்தது. அந்தவகையில், சூர்யா நடிப்பில் வெளியான ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். 

இதனைத் தொடர்ந்து, மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ‘டான்’ படத்தில் ஜோடி சேர்ந்தார். கல்லூரி பின்னணியில் உருவான இந்த படத்தில், பிரியங்கா மோகனின் கதாபாத்திரம் இளம் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. 

சினிமா மட்டுமல்லாமல், சமூக வலைத்தளங்களிலும் பிரியங்கா மோகன் மிகுந்த ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது தனது போட்டோஷூட் படங்கள், படப்பிடிப்பு அனுபவங்கள், க்யூட் மோமென்ட்ஸ் போன்றவற்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். இதனால், அவரது ரசிகர் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், பிரியங்கா மோகன் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “க்யூட்”, “நேச்சுரல் பியூட்டி” போன்ற கமெண்ட்ஸினை குவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement