• Jan 18 2025

ரசிகையின் ட்விட் பார்த்து எமோஷனல் ஆன விஜய் டிவி பிரியங்கா.. அப்படி என்ன சொல்லியிருக்காங்க..!

Sivalingam / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிரியங்கா சின்னத்திரையில் 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் அவருக்கு ரசிகை ஒருவர் எமோஷனலாக வாழ்த்து தெரிவித்த நிலையில் அந்த வாழ்த்து பதிவை பார்த்த பிரியங்கா உணர்ச்சிவசப்பட்டு உள்ளார். 

விஜய் டிவி பிரியங்கா ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் என்பதும் கடந்த 15 ஆண்டுகளாக அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் பல வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

‘கலக்கப்போவது யாரு’ ’சூப்பர் சிங்கர்’ ’அச்சம் தவிர்’ ’நகைச்சுவை ராஜா கலக்கல் ராணி’ ’ஓ சொல்றியா ஓஓ சொல்றியா’ உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை அவர் தொகுத்து வழங்கியுள்ளார். குறிப்பாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் பல சீசன்களை அவர் தான் தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் சின்னத்திரைக்கு வந்து 15 ஆண்டுகள் ஆனதை அடுத்து அவருக்கு  ரசிகை ஒருவர் எமோஷனலாக வாழ்த்து தெரிவித்துள்ளார். சின்னத்திரையில் 15 ஆண்டுகள் என்பது சாதாரண விஷயம் அல்ல, இந்த 15 ஆண்டுகளில் நீங்கள் தொலைக்காட்சி துறையில் எத்தனை அவமானம், எத்தனை கல்லடி, எத்தனை வெகுமதி, எத்தனை பரிசுகள் பெற்று இருக்கிறீர்கள் என்பதை நாங்கள் அறிவோம். இது அவ்வளவு எளிதான பயணம் அல்ல, இந்த உலகம் உங்களின் வெற்றியை கொண்டாடுகிறது, உங்களுக்கு என்றும் நாங்கள் உறுதுணையாக இருப்போம், உங்கள் மீது எறியப்பட்ட கற்களை எல்லாம் நீங்கள் படிக்கட்டுகளாக மாற்றி உள்ளீர்கள்’ என்று தெரிவித்திருந்தார். 



ரசிகையின் எமோஷனலான பதிவை பார்த்த பிரியங்கா ’உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று எனக்கு தெரியவில்லை, உங்கள் பதிவை பார்த்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன், இன்னும் அதிகமாக எனது ரசிகைக்காக உழைக்க வேண்டும் என்று ஆவல் எனக்கு ஏற்படுகிறது. கண்டிப்பாக உங்களை நான் மறக்க மாட்டேன்’ என்று பதிவு செய்துள்ளார்.

Advertisement

Advertisement