பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் கடந்த ஜனவரி 19ஆம் தேதி தான் நிறைவுக்கு வந்தது. இந்த சீசனின் டைட்டில் வின்னராக முத்து குமரன் முடிசூட்டப்பட்டார்.
இந்த சீசனின் ஆரம்பத்தில் ரவீந்தர், சாச்சனா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, தர்ஷா குப்தா, சத்யா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றார்கள்.
இதை தொடர்ந்து வைல்ட் கார்ட் என்ட்ரியாக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன் மற்றும் சிவகுமார் ஆகிய ஆறு பேரும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்கள்.
இந்த சீசன் ஆரம்பத்தில் சலிப்பாக காணப்பட்டபோதும் இறுதி நிலையில் தான் ஆட்டமே சூடு பிடித்தது. அதிலும் ஜாக்குலின் வெளியேறிய சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
ஆனாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அனைவரும் சந்தித்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றார்கள்.
இந்த நிலையில், பிக்பாஸ் பிரபலங்களான சுரேஷ் சக்கரவர்த்தி, சாச்சனா, ராணவ், சத்தியா மற்றும் அவருடைய மனைவி ஆகியோர் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகின்றது.
Listen News!