• Jan 18 2025

பிரதீப்பின் அடுத்த செருப்படி பதிவு,என்ன மனுசன்யா நீ - ரசிகர்களிடமிருந்து வலுக்கும் ஆதரவு

stella / 1 year ago

Advertisement

Listen News!


பிக் பாஸ் 7ம் சீசன் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பூர்ணிமா கேங் சொன்ன குற்றச்சாட்டுக்காக கமல் பிரதீப் ஆண்டனியை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றிவிட்டார்.

அது சரியான முடிவு அல்ல என பிரதீப்புக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவு பெருகி வருகிறது. கமலின் முடிவுக்கு ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.


மேலும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிரதீப் பிக்பாஸ் வீட்டில் தனக்கு கிடைத்த பொருட்களையெல்லாம் கையில் பிடித்தபடி, தனது நண்பர்கள் மற்றும் தோழிகளுடன் உற்சாகம் பொங்க போஸ் கொடுத்த புகைப்படத்தை நேற்றைய தினம் வெளியிட்டிருந்தார்.

இதனை அடுத்து தற்பொழுது சோஷியல் மீடியாக்களில் எனக்கு ஆதரவு தெரிவிக்கும் எல்லோருக்கும் நன்றி. என்னால் முடிந்த அளவுக்கு நலல ஆடிஸ்டாக வர முயற்சி செய்கின்றேன். நல்லா இருங்க அடுத்த வேலையைப் பார்ப்போம் என்றும் புதிய பதிவை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.


இதனால்பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று பொய்யான புகாரில் வெளியில் வந்தாலும் அதனை எல்லாம் பொருட்படுத்தாது அடுத்த வேலையைப் பார்க்க கிளம்பிட்டாரே என்ன மனுசன்யா நீ என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement