• Dec 04 2023

செழியனுக்கும் தனக்கும் உறவு இருந்ததை ஆதாரத்துடன் நிரூபித்த மாலினி- அதிர்ச்சியில் உறைந்த கோபி- கதறி அழும் ஜெனி- Baakiyalakshmi Serial

stella / 4 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்று பார்ப்போம்.

மாலினி வீட்டிற்கு வந்திருப்பதைப் பார்த்து எல்லோரும் அதிர்ச்சியடைகின்றனர். அப்போது மாலினி தான் செழியனைப் பார்த்தே ஆக வேண்டும் என்று கத்திக் கூப்பிடுகின்றார்.அப்போது பாக்கியா இப்போ எதுக்கு நடுவீட்டில நின்று கத்திற முதலில் இங்க இருந்து போ என்று விரட்ட, ராமமூர்த்தியும் திட்டுகின்றார்.


இருந்தும் மாலினி அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் செழியனைக் கத்திக் கூப்பிட எல்லோரும் கீழே வருகின்றனர். அப்போது மாலினி செழியன் தன்னை ஏமாற்றி விட்டான அவனுக்கும் எனக்கும் தனிப்பட்ட ரீதியிலும் பழக்கம் இருக்கு, ஜெனியை பிடிக்கவே இல்லை ஜெனியை டிவோர்ஸ் பண்ணிட்டு என்னை கல்யாணம் பண்ணுறேன் என்று சொன்னான் என்று சொல்ல எல்லோரும் அதிர்ச்சியடைகின்றனர்.

இருந்தாலும் நீ சொல்லுறதை எல்லாம் நம்ப முடியாது செழியன் அப்படிப்பட்ட பையன் இல்லை என்று கோபி சொல்ல,மாலினி எனக்கு ஒரு நியாயம் கிடைச்சே ஆகனும் என்று சொல்லி செழியன் தன்னுடன் எடுத்த வீடியோ , போட்டோக்கள் எல்லாவற்றையும் காட்டுகின்றார்.அத்தோடு செழியன் பற்றிய இந்த விஷயம் பாக்கியாவுக்கும் தெரியும் என்று கோர்த்து விடுகின்றார்.


இதனால் இந்த வீடியோக்கள் போட்டோக்களைப் பார்த்த ஜெனி கதறி அழுகின்றார். எல்லோரும் அதிர்ச்சியில் என்ன செய்வதென்று தெரியாமல் நிற்கின்றனர். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement

Advertisement