• Jul 04 2024

பிரபாஸின் ‘கல்கி 2898 ஏடி’ படம் தேறியதா? வெளிநாட்டில் பார்த்தவர்களின் விமர்சனம்..!

Sivalingam / 1 week ago

Advertisement

Listen News!

பிரபாஸ் நடித்த ’கல்கி 2898 ஏடி’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள நிலையில் இந்தியாவில் இன்னும் காட்சிகள் ஆரம்பிக்கவில்லை என்றாலும் வெளிநாடுகளில் படம் பார்த்தவர்கள் தங்களுடைய கருத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

பிரபாஸை பொருத்தவரை இந்த படத்தில் அவர் ஒரு சிறப்பு தோற்ற கேரக்டரை விட கொஞ்சம் அதிகமாக வருகிறார் என்றும் அதே நேரத்தில் அவர் இரண்டாம் பாகத்தில் அதிகமாக வர வாய்ப்பு இருப்பதாகவும் படம் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கமல்ஹாசன் காட்சிகள் மற்றும் பின்னணி இசை அருமையாக இருந்தது என்றும் முதல் பாதி திரைப்படம் சுமாராகவே இருந்தது என்றும் கூறப்படுகிறது. மேலும் இரண்டாவது பாதி மிகவும் நீளமாக இருக்கிறது என்றும் எடிட்டர் தனது பணியை சரியாக செய்யவில்லை என்றும் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.

முதல் 10 நிமிடம் மற்றும் இன்டர்வல் பிளாக் காட்சிகள் சூப்பர் என்றும், கிளைமாக்ஸ் மற்றும் இரண்டாவது பாதியின் லீடு காட்சிகள் அருமையாக இருப்பதாகவும் ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தில் எந்தவிதமான எமோஷனல் கனெக்ட்டும் இல்லை என்றும் ஒரு முறை பார்க்கக்கூடிய வகையில் சுமாரான படம் என்ற அளவிலும் படம் பார்த்தவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

மொத்தத்தில் இந்த படம் மோசமான படமும் இல்லை, அதே நேரத்தில் நல்ல படமும் இல்லை, சுமாரான படம் என்றும்  முதல் கட்ட விமர்சனங்கள் வெளியாகி உள்ளன. இனி அடுத்தடுத்து விமர்சனங்கள் எப்படி வருகிறது என்பதை பின்னர் பார்ப்போம்.

Advertisement

Advertisement