• Jan 18 2025

திரைக்கு வர முன்னே இத்தனை விருதுகளா ? "கொட்டுக்காளி" க்கு அடுத்த விருது !

Thisnugan / 6 months ago

Advertisement

Listen News!

நகைச்சுவை நடிகரில் இருந்து கதாநாயகனாக புது பரிணாமம் எடுத்த நடிகர் சூரியின் நடிப்பிற்கு கிடைக்கும் வரவேற்பை இதுவரை வேறு எந்த நகைச்சுவை நடிகரும் பெற்றதாய் இல்லை.அடுத்தடுத்த வாய்ப்புகள் சூரியின் கதவை தட்ட முதலவதாய் அமைந்தது சூரியின் அன்புத்தம்பி நடிகர் சிவகார்த்திகேயனின்  எஸ்.கே புரொடக்ஷன்ஸ்.

Soori & Anna Ben's 'Kottukkaali' shoot ...

அந்த வகையில் சூரி கதாநாயகனாக நடித்து வெளிவர இருக்கும் அடுத்த படமான "கொட்டுக்காளி"  எஸ்.கே புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில்  பி.எஸ் வினோத்ராஜ் இயக்கியுள்ளார்."கொட்டுக்காளி"  திரைப்படமானது 74வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவின் ஒரு பகுதியாக கடந்த  பிப்ரவரி 16 ஆம் திகதி திரையிடப்பட்டது.

Berlin Film Festival | Baradwaj Rangan

வர்த்தக ரீதியாக இன்னும் வெளிவராத "கொட்டுக்காளி" திரைப்படமானது உலக அளவில் கொண்டாடப்படும் பெரும் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு அனேக விருதுகளை சொந்தமாக்கியுள்ளது.இந்நிலையில் போர்த்துக்கலில் இடம்பெற்ற 20வது FEST - புதிய இயக்குனர்கள்/புதிய திரைப்படங்கள் சர்வதேச திரைப்பட விழாவில் 'சிறந்த திரைப்படத்திற்கான "GOLDEN LYNX" விருதை வென்றிருக்கிறது "கொட்டுக்காளி" திரைப்படம்.


Advertisement

Advertisement