• Apr 30 2024

ஏ.கே 61 படத்தில் இணைந்த பிரபல யூடியுப் நடிகை- அடடே இவரும் நடித்து வருகின்றாரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் அஜித்குமார். இவர் தற்பொழுது எச்.வினோத்- போனிகபூர் ஆகியோருடன் மூன்றாவது முறையாக இணைந்து AK61 என்னும் படத்தில் நடித்த வருகின்றார். இப்படத்தின் பூஜை கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து ஐதராபாத்திலுள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பானது நடைபெற்று வருகின்றது. இதன் முதற்கட்டப் படப்பிடிப்பானது முடிவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடந்த ஜூன் 15ஆம் தேதி முதல் சென்னையில் ஆரம்பித்தது.

சென்னை படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு வரை சென்னையில் உள்ள காசிமேடு, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள காரப்பாக்கம், வண்டலூர் அருகிலுள்ள மண்ணிவாக்கம் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தாக கூறப்படுகிறது. முக்கிய சாலைகளில் பரபரப்பான பகுதியில் படப்பிடிப்பு நடந்தது.

இந்த படப்பிடிப்பில் நடிகை மஞ்சு வாரியர் கலந்து கொண்டு நடித்து வருகின்றர்.இந்நிலையில் பிரபல யூடியூப் புகழ் நடிகை புவனேஸ்வரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதில் "இந்த புகைப்படங்கள் கனவு நனவாகும் மிகவும் மதிப்புமிக்க பொக்கிஷமான தருணங்களில் ஒன்றாகும்.முதலில் இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் வினோத் அவர்களுக்கு எனது நன்றி மற்றும் அனைத்து உதவி இயக்குநர்களுக்கும் குறிப்பாக நன்றி

உங்கள் டீமுடன் இணைந்து பணியாற்றியதும், #ak61-ல் ஒரு அங்கமாக இருப்பதும், எனக்குப் பிடித்த ஹீரோ அஜித்குமார் சாருடன் நடிக்கவும் கிடைத்ததும் மற்றும் அவர் அனைவரையும் மரியாதையுடன் நடத்திய விதம் இன்னும் ஆச்சரியமாக உள்ளது.உங்கள் விருந்தோம்பலுக்கு நன்றி நிரவ்ஷா சார். மஞ்சுவாரியர், நான் எப்போதாவது ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தச் செல்லும் போது மிகவும் இனிமையாக இருந்தார், அவர் தனது நேரத்தை எடுத்து பொறுமையுடன் விளக்கினார்" என கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement