• May 07 2024

நீல வானில் மின்னும் நட்சத்திரம் போல் கறுப்பு உடையில் ஜொலிக்கும் பூனம் பஜ்வா.... அதுவும் இவ்வளவு நீளமாகவா...? இது இவங்க லிஸ்ட்டிலேயே இல்லையே..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகை பூனம் பஜ்வா. முதன்முதலில் தெலுங்கு திரைப்படத்தில் நடித்து திரைத்துறையில் அறிமுகமாகியுள்ள இவர் பின்னர் தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்து பிரபலமாகியுள்ளார். 


அந்தவகையில் இவர் தமிழில் இயக்குநர் ஹரி இயக்கிய 'சேவல்' திரைப்படத்தின் மூலம் கதாநாயாகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 'கச்சேரி ஆரம்பம், தெனாவட்டு, தம்பக்கோட்டை, ரோமியோ ஜூலியட், அரண்மனை 2, முத்தின கத்தரிக்காய்' எனப் பல படங்களிலும் நடித்திருக்கின்றார்.


மேலும் நடன இயக்குநர் பாபா இயக்கத்தில், ஜி.வி பிரகாஷ் ஹீரோவாக நடித்திருந்த 'குப்பத்து ராஜா' என்ற படத்திலும் இவர் இணைந்து நடித்திருந்தார். இவ்வாறாக பல படங்களிலும் தனது நடிப்பினை திறம்பட வெளிப்படுத்தி வருகின்ற பூனம் பஜ்வா சமீபகாலமாக தன்னுடைய கவனத்தை சமூக வலைத்தளங்களின் பக்கமாகவே அதிகளவில் திருப்பி வருகின்றார். 


அதில் தனது கவர்ச்சிப் புகைப்படங்கள், மற்றும் வீடியோக்களினை அதிகளவில் பதிவு செய்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றார். அந்தவகையில் தற்போது வழக்கத்திற்கு மாறாக கறுப்பு நிறத்தில் முழு நீள உடையணிந்து புகைப்படங்களை எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கின்றார். 


அப்புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவதோடு "ஏன் இந்த திடீர் மாற்றம்" எனக் கேள்விகளை கமெண்டுகளை பதிவு செய்தும் வருகின்றனர். 


Advertisement

Advertisement

Advertisement