• May 12 2024

படப்பிடிப்பின் போது கால் தசை நாரைக் கிழித்துக் கொண்ட பூஜா ஹெக்டே- வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்..!

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் படு பிசியாக நடித்து வருபவர் தான் பூஜா ஹெக்டே. தமிழில் வெளியான முகமூடி படத்தின் மூலம் அறிமுகமாகியிருந்தாலும் இவருக்கு ந்நதொரு அடையாள்தைப் பெற்றுக் கொடுத்தது தெலுங்கு திரைப்படங்கள் எனலாம்.

மேலும் தமிழில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார்.மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவான இந்த படம், படு தோல்வியடைந்ததால், தற்போது வரை எந்த ஒரு தமிழ் படத்திலும் கமிட் ஆகாமல் உள்ளார்.


அதே நேரம் இவர் நடித்த தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைப்பதை தொடர்ந்து இவரது கை வசம் ஒரு தெலுங்கு திரைப்படம் மற்றும் இரண்டு ஹிந்தி படங்கள் கைவசம் உள்ளன. இந்நிலையில், இவருக்கு படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டுள்ளதாக புகைப்படம் வெளியிட்டு அவர் கூறியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தற்போது ஹிந்தியில் இவர் நடித்த வரும் 'கிசி கா பாய் கிசி கி ஜான்' என்கிற படத்தின் படப்பிடிப்பின் போது, தவறி விழுந்ததில், பூஜாவின் இடது காலில் உள்ள தசை நார் கிழிந்து வலியில் துடித்துள்ளார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். 


தற்போது மருத்துவர்களின் அறிவுரை படி... சில நாட்கள் ஓய்வுக்கு பின்னரே மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தன்னுடைய காலில் கட்டுபோட்டுள்ள புகைப்படத்தை இஸ்டாகிராம் ஸ்டோரியில், புகைப்படம் வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார். ரசிகர்களும் விரைவில் பூஜா ஹெக்டே நலமடைய தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement