• Apr 30 2024

ஆல்டைம் ரெக்கார்டை அடிச்சுதூக்கிய பொன்னியின் செல்வன்- தமிழகத்தில் மட்டும் 3 வார முடிவில் மொத்தம் இத்தனை கோடி வசூலா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த 30ம் திகதி மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.இப்படத்தில் விக்ரம், திரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், ஜெயராம், விக்ரம் பிரபு, சரத்குமார், பிரபு, பார்த்திபன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் மிகவும் பிரமாண்டமாக வெளியாகிய இப்படம் வசூலில் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் விக்ரம் படத்தின் லைஃப் டைம் வசூலை 426 கோடியை தாண்டி சாதனை படைத்த இப்படம், தற்போது தமிழகத்தில் மட்டும் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்துள்ளது. 


இதன்மூலம் தமிழகத்தில் அதிக வசூல் ஈட்டிய படங்கள் பட்டியலில் விக்ரம் படத்தை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது பொன்னியின் செல்வன். இதன்மூலம் விக்ரம் படத்தின் ஆல்டைம் ரெக்கார்டை தகர்த்துள்ளது பொன்னியின் செல்வன். இதுவரை தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த படங்கள் பட்டியலில் பொன்னியின் செல்வன் முதலிடத்திலும், விக்ரம் இரண்டாவது இடத்திலும் உள்ளன. பாகுபலி 2, விஸ்வாசம், பிகில் ஆகிய படங்கள் முறையே அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. 


அதுமட்டுமின்றி அமெரிக்காவில் மட்டும் இப்படம் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது. தற்போது வரை பொன்னியின் செல்வன் திரைப்படம் மொத்தமாக ரூ.461 கோடி வசூல் ஈட்டி உலகளவில் அதிக வசூல் ஈட்டிய தமிழ் படங்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் ரஜினியின் 2.0 திரைப்படம் முதலிடம் பிடித்துள்ளது. அப்படம் உலகளவில் ரூ.650 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement