• May 03 2024

ப்ரீ புக்கிங்கில் பட்டைய கிளப்பும் பொன்னியின் செல்வன் 2.. அதுவும் எவ்வளவு தெரியுமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் பொன்னியின் செல்வன்-1. 

இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சில விருதுகளையும் குவித்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இப்படம் தென்னிந்திய சினிமாவில் முதல்முறையாக 4DX தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ள முதல் திரைப்படமாக 'பொன்னியின் செல்வன் -2' வெளியாகவுள்ளது.


எனினும் சமீபத்தில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் ப்ரீ புக்கிங் அமெரிக்காவில் ஆரம்பமாகி உள்ளது. அங்கு சில மணி நேரத்திலேயே 3,000 -ம் மேல் டிக்கெட் விற்றுள்ளதாம்.

இந்நிலையில் PS 2, 65 $ டாலர்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement