• Sep 22 2023

பொன்னியின் செல்வன் 2 தோல்வியடைய விக்ரம் இப்பிடிப் பண்ணியது தான் காரணமா?- புதுப் புரளியைக் கிளப்பிய ப்ளூ சட்டை மாறன்

stella / 1 week ago

Advertisement

Listen News!


தென்னிந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பில் மிகவும் பிரமாண்டமாக வெளியாகிய திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.இயக்குநர் மனிரத்னம் இயக்கத்தில், சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ரகுமான்  உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.

கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் பாகம் 1 500 கோடி வசூல் செய்து விக்ரம் படத்தையே வீழ்த்தி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. ஆனால், அதன் 2ம் பாகம் இந்த ஆண்டு பெரும் ஹைப்புடன் வெளியான நிலையில், வெறும் 300 கோடி வசூலை மட்டுமே பெற்று ஏகப்பட்ட விமர்சனங்களையும் பெற்றது.


இந்த ஆண்டு பொன்னியின் செல்வன் 2 என்கிற ஒரு படம் வந்ததை போலவே தெரியாத அளவுக்கு ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி ஒட்டுமொத்தமாக வசூலிலும் புகழிலும் முன்னணியில் உள்ளது.


இந்த நிலையில் விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் பொன்னியின் செல்வன் 2 படத்தின் புரமோஷனுக்கு வித விதமான உடைகளை அணிந்து கொண்டு விக்ரம் பண்ண அலப்பறைகள் தான் அந்த படத்தின் தோல்விக்கு காரணம் என ட்வீட் போட்டுள்ளார். இதனால் சியான் விக்ரம் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement