• Sep 27 2023

எதிர்நீச்சல் சீரியலில் இருந்து விடைபெற்ற மாரிமுத்து- சன்டிவி வெளியிட்ட Tribute வீடியோ

stella / 2 weeks ago

Advertisement

Listen News!

சன் டிவி தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் 'எதிர்நீச்சல்' தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. வீட்டில் என்ன வேலை இருந்தாலும் இந்த சீரியலுக்காக டைம் ஒதுக்கிக்கொண்டு பார்க்கும் இல்லத்தரசிகள் முதல் இளைஞர்கள் வரை பலர் உள்ளனர். 

இப்படி ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல ஆதரவை பெற்று வரும் இந்த சீரியலின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் மாரிமுத்து.எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்களை சோகத்தில் ஆழ்த்தியது. 


இந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் பலர் மீண்டு வரவில்லை என்றே கூறலாம். காரணம் 'எதிர்நீச்சல்' சீரியலில் யாராலுமே ஈடு செய்யமுடித்தாத ஒரு தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி வந்தார் குணசேகரன். எனவே மாரிமுத்து குணசேகரனாக நடித்த எப்பிஷோட் இன்றைய தினம் ஒளிபரப்பாகியது. இவருக்கு பதிலாக யார் அடுத்த குணசேகரனாக நடிக்கப்போகின்றார் என்ற எதிர்பார்ப்பே ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.

இப்படியான நிலையில் சன்டிவி குணசேகரனை நினைவு கூறும் விதமாக Tribute வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ குணசேகரனாக மாரிமுத்து சீரியலில் என்ட்ரி கொடுத்ததில் இருந்து இறுதியாக நடித்தது வரை அதில் அடங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement