• Apr 26 2024

பொன்னியின் செல்வன் படக்குழுவினருடன் தொகுப்பாளினி டிடி எடுத்த போட்டோஸ்- வெளியாகிய லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகும், அனைத்து தொகுப்பாளர்களுக்குமே, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும், இதில் மிகவும் ஸ்பெஷல்என்றால் அது டிடி தான்.


விஜய் டிவியில் செல்லப்பிள்ளை என அனைவரும் அழைக்கும் அளவிற்கு, தன்னுடைய இளம் வயதிலேயே விஜய் டிவியில் தன்னுடைய தொகுப்பாளர் பணியை துவங்கிய டிடி, பலமுறை சிறந்த தொகுப்பாளர் காண விருதை பெற்றுள்ளார்.


திவ்யதர்ஷினி தொகுப்பாளராக மட்டுமின்றி, ஆரம்பத்தில் சில சீரியல்களிலும் நடித்துள்ளார். நடிகை ராதிகா தன்னுடைய ராடான் நிறுவனம் மூலம் தயாரித்து நடித்த, அரசி, செல்வி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.


கடந்த 2014 ஆம் ஆண்டு தன்னுடைய நீண்ட நாள் நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர், பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார்.


விவாகரத்துக்கு பின்னர் தான், ஃபேஷன் நிகழ்ச்சி, திரைப்பட நடிப்பு போன்றவற்றில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார். அந்த வகையில் அண்மையில் முடிவடைந்த பொன்னியின் செல்வன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தொகுப்பாளராகவும் கடமையாற்றி இருந்தார்.அந்த விழாவில் படக்குழுவினருடன் அவர் எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement