• May 29 2023

கிளாமர் உடையில் பரதநாட்டியம் ஆடும் பாக்கியலட்சுமி ராதிகா....தீயாய் பரவும் வீடியோ.!

Aishu / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ்நாட்டில் முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களில் ஒன்றாக திகழும் விஜய் தொலைக்காட்சியின் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனம் கவர்ந்தவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள சீதாராமன் எனும் புத்தம் புதிய சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

 சின்னத்திரை மட்டுமல்லாது வெள்ளித்திரையிலும் மசாலா படம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக களமிறங்கிய நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி, தொடர்ந்து வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் நடித்த புஷ்பா கதாபாத்திரத்தால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த பிரபலம் அடைந்தார். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் இடம் பெற்ற புஷ்பா கதாபாத்திரமும் புஷ்பா புருஷன் என்ற வாசகமும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

 தொடர்ந்து கோ 2, மணல் கயிறு 2, திரைக்கு வராத கதை, வணக்கம் டா மாப்பிள்ளே, பேய் மாமா, 3:33 உள்ளிட்ட படங்களிலும் முக்கிய வேடங்களில் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி நடித்துள்ளார்.இருப்பினும் தற்போது விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டிக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளமே தற்போது குவிந்து இருக்கிறது.

இந்நிலையில் தற்போது சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவர் மொடேர்ன் உடையில் பரத நாட்டியம் ஆடியுள்ளார்.இதைப் பார்த்த ரசிகர்கள் பாக்கியாவுடன் சண்டை இங்கே பரதநாட்டியமா என பதிவிட்டு வருகின்றார்கள்.



Advertisement

Advertisement

Advertisement