நடிகை விஜயலட்சுமி, 2007 ஆம் ஆண்டு வெளியான ‘சென்னை 28’ படத்தின் மூலம் அறிமுகமானார் விஜயலக்ஷ்மி. அதன் பின்னர் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இறுதியாக சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்திருந்தார். இவர் தனது பள்ளி பருவ தோழரான பெரோஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. மேலும், விஜயலட்சுமியின் கணவர் பெரோஸ்.
விஜயலட்சுமியின் கணவர் பெரோஸ், பண்டிகை என்ற படத்தை கூட இயக்கி இருந்தார். அத்தோடு, நடிகை விஜயலக்ஷ்மி விஜய் தொலைக்காட்சில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளராகவும் கலந்து கொண்டார்.
அத்தோடு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டிலை வென்றார்.மேலும் சில வாரங்களுக்கு முன்னர் இவர் நடனம் ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட அதனை பார்த்த ரசிகர் ஒருவர் மோசமாக விமர்சனம் செய்ய அதற்கு தக்க பதிலடி கொடுத்திருந்தார் விஜயலட்சுமி.
இந்த நிலையில் தற்போது குடும்பத்தோடு சிங்கப்பூர் சுற்றுலா சென்றுள்ள விஜயலட்சுமி அங்கே கணவருடன் கையில் சரக்கு கிளாஸ் உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் ஒரு பொண்ணா இருந்தா இப்படிப் பண்ணலாமா என விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த விமர்சனங்களுக்கு விஜயலட்சுமி என்ன பதிலடி கொடுக்கப் போகிறார் என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும்.
Listen News!