• Apr 30 2024

பிக்பாஸ் 7 வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்த சீரியல் நடிகை ரவீனா- லீக்கான பர்ஃபார்மன்ஸ் வீடியோ

stella / 6 months ago

Advertisement

Listen News!

கடந்த 6 ஆண்டுகளாக கடமை தவறாமல் கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நாளை மாலை 6:00 மணி முதல் ஒளிபரப்பப்படவுள்ள நிலையில் அதற்கான ஷுட்டிங் தற்பொழுது நடைபெற்று வருகின்றது.

இந்த நிகழ்ச்சியில் பங்கு பற்றப் போகும் பாட்டியாளர்கள் குறித்த தகவல்களும் அடிக்கடி வெளியாகிக் கொண்டிருக்கின்றது. அதன்படி பிருத்விராஜ் பப்லு, கூல் சுரேஷ், யுகேந்திரன், பிக் பாஸ் அமீரின் நட்பு ஐஷு மற்றும் ரவீனா தாஹா உள்ளிட்ட போட்டியாளர்கள் பங்குபற்ற போவதாக கூறப்பட்டது.


அதன் படி தற்பொழுது ரவீனா தாஹா பிக்பாஸிற்குள் என்ட்ரி கொடுத்த வீடியோ வெளியாகியுள்ளது.ரவீனாவின் பர்ஃபார்மன்ஸைப் பார்த்த ரசிகர்கள் அதனை வைரலாக்கி வருகின்றனர்.இந்த முறை பிக் பாஸ் வீட்டை பார்த்தால் பாலிவுட்டில் போடப்படும் பிரம்மாண்டமான செட்களுடன் 2 பிக் பாஸ் வீடுகள் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும், அதன் கலை இயக்குநர் மாற்றப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

வீட்டுக்குள்ளே பிக் பாஸ் 7 என ஆங்கிலத்தில் பிரம்மாண்ட லைட் செட்டப்புகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று கசிந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது..



Advertisement

Advertisement

Advertisement