• Mar 28 2023

காவியா முன்னாடி ரம்மியாவுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட பார்த்திபன்- எதிர்பாராத திருப்பங்களுடன் ஈரமான ரோஜாவே சீரியல்

stella / 3 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் ஈரமான ரோஜாவே சீரியல். இதில் திருமணத்தில் நடந்த சிறு தவறு காரணமாக காதலர்களாக இருந்த ஜீவாவும் காவியாவும் பிரிந்ததோடு ஜீவா ப்ரியாவையும் பார்த்தி காவியாவையும் திருமணம் செய்தனர்.

என்ன தான் குடும்பத்திற்காக இவர்கள் தமது காதலை தியாகம் செய்திருந்தாலும் காவியா பார்த்தியுடன் சேர்ந்து வாழக் கூடாது என அவரது அம்மா முதல் அத்தை எனப் பலரும் திட்டம் தீட்டி வந்தனர். ஒரு வழியாக காவியா காதலித்த விடயம் பார்த்திபனுக்கும் தெரிந்து விட்டது.


அத்தோடு அத்தை மகளான ரம்மியாவைத் திருமணம் செய்ய சம்மதித்து விட்டதோடு பார்த்திபன் ரம்மியா திருமணத்திற்கான நிச்சயதர்த்தமும் நடைபெறவுள்ளது. இந்த நிச்யதார்த்த விழாவில் காவியா கலந்து கொண்டு வாழ்த்துத் தெரிவிக்க வந்துள்ளார். இது குறித்த ப்ரோமோவே இப்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.

இதனால் காவியாவும் பார்த்திபனும் சேர்ந்து வாழ்வார்கள் என்று கருதிய ரசிகர்களுக்கு பார்த்திபனின் நிச்சயதார்த்தம் பேரதிர்ச்சியாகவே உள்ளது. அத்தோடு எப்போது பார்த்திபனுக்கு உண்மை தெரிய வரும் எனக் காத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement