• Sep 26 2023

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடங்குவதில் ஏற்பட்ட புதிய சிக்கல்- கடும் குழப்பத்தில் இருக்கும் சீரியல் குழு

stella / 3 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ரசிகர்களைக் கவரும் விதமாக பல சீரியல்கள் ஓடிக் கொண்டிருக்கின்றது. அதிலும் அண்ணன் தம்பி பாசத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.மூர்த்தி-தனம், ஜீவா-மீனா, கதிர்-முல்லை, கண்ணன்-ஐஸ்வர்யா என இதில் நடித்து வருபவர்கள் அனைவரும் பிரபலமாகி விட்டனர்.

தற்பொழுது பல போராட்டங்களில் பின்னர் குடும்பம் ஒன்றாக இணைந்து விட்டதோடு தமது புது வீட்டுக்கும் சென்று விட்டனர். கண்ணன் தன்னுடைய வேலை எப்போது திரும்பக் கிடைக்கும் என்ற ஏக்கத்தில் இருக்கின்றார். அத்தோடு தனத்திற்கு தான் கான்சர்நோய் என்ற விஷயம் ஐஸ்வர்யாவுக்கு தெரிய வந்து விட்டது.


இதனால் அவர் வீடியோ போட்டு முழுக் குடும்பத்திற்கும் தெரிய வைத்து விட்டார். அடுத்து என்ன நடக்கப் போகின்றது மூர்த்தி என்ன முடிவெடுக்கப் போகின்றார் என்ற எதிர்பார்ப்பும் காணப்படுகின்றது.

இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் சீசன் முடிவடைந்து 2வது சீசன் தொடங்க இருக்கிறது என ஏற்கெனவே தகவல் வெளியாகி இருந்தது. அதற்கான ஏற்பாடுகளையும் தொடர் குழுவினர் பக்காவாக செய்து விட்டார்களாம்.ஆனால் திடீரென சுஜிதா சொந்த விஷயங்கள் காரணமாகவும், குமரன் படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளதால் 2வது பாகத்தில் நடிக்க முடியாது என கூறியுள்ளார்களாம்.


அவர்கள் மாறினால் கதை நன்றாக இருக்காதே என்ன செய்வது என்று பெரிய சிக்கலை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.


Advertisement

Advertisement

Advertisement