• Sep 30 2023

ஜவான் இசை வெளியீட்டு விழாவில் சர்ப்ரைஸாக என்ட்ரி கொடுத்த கமல்ஹாசன்- செம குஷியில் படக்குழு

stella / 4 weeks ago

Advertisement

Listen News!


பாலிவூட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் பான் இந்தியத் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் ஜவான். அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஷாருக்கானுடன் விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன், ப்ரியாமணி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இந்தத் திரைப்படம்  செப்டம்பர் 7ம் தேதி வெளியாகவுள்ளது. 

இந்நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.இதில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, அட்லி, அனிருத், ப்ரியாமணி உட்பட ஏராளமான திரை பிரபலங்களும் ரசிகர்களும் கலந்துகொண்டனர்.இந்த நிகழ்வில் முன்னணி நடிகர்கள் யாராவது கலந்து கொள்வார்கள் என்று  எதிர்பார்க்கப்பட்டது.


அதன் படி நடிகர் விஜய் தான் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரோ தளபதி 68 படத்திற்கான மேக்கப் டெஸ்ட் எடுப்பதற்காக அமெரிக்கா சென்றுவிட்டதாகத் தெரிகிறது. ஜவான் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறுவதால், முன்னணி நட்சத்திரங்கள் யாரும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.


 நிகழ்ச்சி ஆரம்பிக்கும் வரை அதற்கான அறிகுறிகள் ஏதும் தெரியாத நிலையில், திடீரென சர்ப்ரைஸ்ஸாக உலகநாயகன் கமல் ரசிகர்கள் முன் தோன்றினார்.தற்போது அமெரிக்காவில் இருக்கும் கமல்ஹாசன், நேராக வர முடியவில்லை என்றாலும், வீடியோ காலில் லைவ்-ஆக வந்து பேசினார். ஜவான் படக்குழுவினர் அனைவருக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் கூறிய கமல், இந்தப் படம் கண்டிப்பாக வெற்றிப் பெறும் என்றும் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement