• Oct 16 2024

நடிகர் அஜித் குறித்து ஓபனாக சொன்ன நடிகர் விஜய்யின் மகன்- அடடே சூப்பராக சொல்லி இருக்காரே

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென ஏராளமான ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர் தான் விஜய். வசூல் மன்னனாக வலம் வரும் இவர் லியோ எஎன்னும் படத்தில நடித்து முடித்துள்ளார். இப்படம் ரிலீஸாகக் காத்திருக்கின்றது. இப்படத்தை அடுத்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கக் கமிட்டாகியுள்ளார்.

இப்படம் குறித்து பேசுவதற்காக விஜய் நேறற்றைய தினம் வெளிநாட்டுக்குச் சென்றுள்ளார். இது குறித்த புகைப்படம் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது. நடிப்பைத் தாண்டி பல சமூகப் பணிகளிலும் விஜய் ஈடுபட்டு வருகின்றார்.


இந்த நேரத்தில் தான் விஜய்யின் மகன் சஞ்சய் குறித்து செய்திகள் வலம் வருகின்றன. சஞ்சய் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறாராம், அவரது முதல் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.இவருடைய படத்தில் யார் கதாநாயகனாக நடிக்கப் போகின்றார் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.


முதல் படம் கமிட்டான நிலையில் சஞ்சய் ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.அதில் அவரிடம் அஜித் குறித்து கேட்க, அஜித் என்றால் கெத்து. எனது அப்பாவையடுத்து பிடித்த நடிகர்கள் என்றால் அஜித் மற்றும் விஜய் சேதுபதி தான் என கூறியுள்ளார். அநேகமாக இவருடைய படத்தில் விஜய் சேதுபதி தான் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Advertisement