• May 03 2024

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முல்லையா இது... தங்க நிற உடையில் எப்படி ஜொலிக்கிறாங்க என்று பாருங்க..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல்கள் ஓடிக் கொண்டிருந்தாலும் பாண்டியன் ஸ்டோர்ஸுக்கு என்று தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உண்டு. அந்த சீரியலில் வரும் கதாபாத்திரங்களை தங்கள் வீட்டில் உள்ளவர்கள் போன்று பார்த்து ரசித்து வருகின்றார்கள். 


மேலும் இந்த சீரியலானது அண்ணன்- தம்பிகளின் பாசத்தை மையப்படுத்திய சுவாரசியமான கதைக்களத்தை மையமாகக் கொண்டமைந்து இருக்கின்றது. பாண்டியன் ஸ்டோர்ஸில் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட கதாபாத்திரம் என்றால் அது வி.ஜே. சித்ரா நடித்து வந்த முல்லை என்ற கதாபாத்திரம் தான். 

ஆனால் வி.ஜே. சித்ராவின் உடைய மறைவிற்கு பிறகு இந்தக் கதாபாத்திரத்தில் தற்போது காவ்யா அறிவுமணி என்பவர் நடித்து வருகிறார். இந்த சீரியலில் முதலில் பெரிதும் வரவேற்பை பெறாத காவ்யா தன்னுடைய சிறந்த நடிப்பின் வாயிலாக தற்போது தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தையே சேர்த்துள்ளார்.


சீரியல்களைத் தாண்டி காவ்யா அறிவுமணி எப்போதும் சமூகவலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருபவர். அதில் அவ்வப்போது தன்னுடைய அழகிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம்.


இந்நிலையில் தற்போதும் இவர் தங்க நிற அழகான உடையணிந்து புகைப்படங்களை பதிவிட்டிருக்கின்றார். அப்புகைப்படங்களிற்கு ரசிகர்கள் தமது லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றார்.

Advertisement

Advertisement

Advertisement