• Sep 08 2024

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இருந்து விலகுகிறாரா வசந்த் வசி.. அவரே சொன்ன தகவல்..!

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் ஒருவர் திடீரென அந்த சீரியலில் இருந்து விலக இருப்பதாகவும் அவருக்கு பதில் வேறு ஒரு நடிகர் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் கசிந்து கொண்டிருக்கின்றன.

பொதுவாக தொலைக்காட்சி சீரியலில் ’இவருக்கு பதில் இவர்’ என்பது சர்வ சாதாரணமாக நடைபெறும் நிகழ்வு என்பதும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கூட இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பது தெரிந்தது .

அந்த வகையில் இந்த சீரியலில் செந்தில் என்ற கேரக்டரில் நடித்து வரும் வசந்த் ரவி விலகி விட்டதாகவும் அவருக்கு பதிலாக முதல் பாகத்தில் மீனா ஜோடியாக நடித்த வெங்கட் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.



இது குறித்து வசந்த் வசி கூறும் போது ’நானும் அந்த வதந்தியை கேள்விப்பட்டேன், ஆனால் என்னிடம் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 குழுவினர் இதுவரை இந்த சீரியலில் இருந்து விலகிக் கொள்கிறீர்களா? என்று கேட்கவில்லை, நானும் அந்த சீரியலில் இருந்து விலகப் போகிறேன் என்று சொல்லவில்லை. இந்த வதந்தியால் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்’ என்று கூறினார்.

இதனை அடுத்து ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ’ சீரியலில் வசந்த் வசந்த் விலகப்போவதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்தி வதந்திதான் என்பது தெரிய வருகிறது. இந்த நிலையில் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் செந்தில் கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட வெங்கட் தரப்பிடம் இது குறித்து கேட்டபோது அவர் கருத்து சொல்ல விரும்பவில்லை என்று சொன்னதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement