• May 06 2024

நம்ம அதிதியா இது..? என்ன ஒரு தோற்றம்... சினிமாவிற்கு வர முதல் இப்படி இருந்திருக்காங்களே...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அறிமுக நாயகிகளில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகை அதிதி ஷங்கர். இவர் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக 'விருமன்' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகியிருந்தார்.



இப்படமானது சமீபத்தில் வெளியாகிய நிலையில் மக்களிடமிருந்து கலவையான பல விமர்சனங்களை பெற்று வருகின்றது. எனினும் அதிதியின் நடிப்பு பலராலும் பேசப்பட்டிருந்தது. அதுமட்டுமன்றி அறிமுகப் படத்திலேயே பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகி இருக்கின்றார் அதிதி.



இந்தப் படத்தினை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'மாவீரன்' படத்திலும் கதாநாயகியாக கால் பதித்திருக்கின்றார். அதுமட்டுமல்லாது விஜய்யுடன் நடிக்க ஆசை படுவதாகவும் சமீபத்தில் இடம்பெற்ற ஒரு பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.


அதிதி தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநரான ஷங்கரின் மகள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒரு விடயமே. இந்நிலையில் இவரது புகைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியாகி வருகின்றது. அதாவது இவர் சினிமாவில் நடிகையாக நுழைவதற்கு முன்னர் தனது தாய், தந்தையுடன் திருமண நிகழ்வொன்றிற்கு சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படமே வெளியாகி இருக்கின்றது.



அப்புகைப்படத்தில் அதிதி முற்றிலும் வேறுபட்ட தோற்றத்தில் காட்சி அளிக்கின்றார். இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதனை தமது சமூக வலைத்தளப் பக்கங்களில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement