• Nov 04 2025

ஒருவழியா முத்து போனை ஆட்டையை போட்ட ரோகிணி! கலவரம் வெடிக்குமா?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில், ரோகிணிடம் 30 லட்சம் கேட்டு பிஏ நெருக்கடி கொடுத்துக் கொண்டிருக்க, ரோகிணி இதை சமாளிப்பதற்காக சிட்டியிடம் சென்று வசமாக மாட்டிக் கொள்கின்றார்.

முத்து போனில் இருக்கும் சத்தியாவின் வீடியோவை எடுத்து தந்தால்தான் பிஏவை ஒரு வழி பண்ணுவேன் என்று சிட்டி சொல்லுகின்றார். இதனால் வேறு வழி இல்லாமல் முத்துவின் ஃபோனில் இருக்கும் வீடியோவை எடுப்பதற்கு ரோகிணி பல  முயற்சிகள் செய்கின்றார். ஆனாலும் ஒன்றும் பலனளிக்கவில்லை.

இறுதியாக தமது அனிவர்சரியில் முத்துவை குடிக்க வைத்து அதன் போது போன் எடுப்போம் என்று திட்டம் போடுகின்றார். ஆனால் இன்றைய எபிசோட்டில் முத்து குடிக்காமல் வீட்டுக்கு கிளம்புவதாக காட்டப்பட்டது.

இந்த நிலையில், தற்போது வெளியான ப்ரோமோவில், மனோஜ், ரவி என இருவரும் குடித்துவிட்டு இருக்க, முத்து மட்டும் குடிக்காமல் இருக்கின்றார். ஆனால் அவரும் இறுதியில் நன்றாக குடித்து மட்டை ஆகி விடுகின்றார்.


இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எப்படியாவது முத்துவிடம்  இருந்து போனை எடுக்க வேண்டும் என்று முடிவு கட்டிய ரோகிணி, லிப்டில் செல்லும் போது முத்து பாக்கெட்டில் இருந்து போனை எடுத்து விடுகின்றார். ஆனாலும் அதனை  மீனா பார்ப்பது போல ப்ரோமோ காட்டப்படுகின்றது.

எனவே முத்துவின் போனை ரோகிணி எடுத்தாரா? இல்லை போன் எடுக்கும் போது மீனா பார்த்து அதனை தட்டி கேட்டாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement