• May 05 2024

அன்று நண்பன் இன்று வில்லனா?- தளபதி 67 படத்தில் ரோலெக்ஸ் என்ட்ரி கொடுக்கவுள்ளாரா?- சூப்பர் அப்டேட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பொதுவாகவே தளபதி விஜய்யின் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக மவுஸ் காணப்படுகின்றது. இதனால் எப்போதும் அவருடைய படங்கள் வெற்றி பெறாவிட்டாலும் வசூலில் அள்ளிக் குவித்து விடும். இந்த வகையில் தளபதி நடிப்பில் இறுதியாக வெளியாகிய பீஸ்ட் திரைப்படம் வெற்றி பெறாவிட்டாலும் வசூலில் அள்ளிக் குவித்தது.

மேலும் இதனைத் தொடர்ந்து வாரிசு என்னும் படத்தில் நடித்த வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அத்தோடு இந்தப் படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி விட்டது.


இதனைத் தொடர்ந்து விஜய் மீண்டும் லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைக்கவுள்ளார்.இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சஞ்சய் தத், அர்ஜுன், விஜய் சேதுபதி, கவுதம் மேனன், பிரித்விராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கப்போவதாகவும். படத்தின் கதாநாயகியாக த்ரிஷா கமிட்டாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும், மும்பை கேங்ஸ்டர் கதை தான் தளபதி 67 என கிசுகிசுக்கப்படுகிறது.இந்நிலையில், இப்படத்தை லோகேஷ் கனகராஜ் தன்னுடைய LCU - Lokesh Cinematic Universe-ல் கொண்டுவர போகிறாராம்.


இதன்மூலம் விக்ரம் - கைதி - தளபதி 67 ஆகிய மூன்று படங்களும் ஒன்றிணையவுள்ளதாக தெரிவிக்கின்றனர்.மேலும், தளபதி 67 படத்தில் விக்ரமில் கடைசியில் வந்து திரையரங்கை அதிரவைத்த ரோலெக்ஸ் கதாபாத்திரம் இடம்பெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் பான் இந்திய அளவில் தளபதி 67 படம் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 



Advertisement

Advertisement

Advertisement