• May 18 2024

எந்த ப்ளூ சட்டைக்கும் பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை- கோபமடைந்த ஆர்.ஜே.பாலாஜி

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரையுலகில் "ஆன்ட்டி இந்தியன்" என்ற படத்தின் மூலம் இயக்குநரானவர் விமர்சகர் ப்ளூ சட்டை மாறன்.இவர் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரமாகவோ அல்லது அறிமுக ஹீரோவாகவோ யாராக இருந்தாலும் சரி பாரபட்சம் பார்க்காமல் எந்த தயக்கமுமின்றி அனைவரையும் விமர்சிப்பார்.

ஒவ்வொரு திரைப்படம் வெளிவரும் போதும் ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்தை எதிர்பார்த்து இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். புகழ் பெற்ற விமர்சகரான இவர் படம் எடுக்கும் இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் குறித்து அதிரடியாக சொல்லும் விமர்சனம் சினிமா துறையினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தும்.

இந்நிலையில் சமீபத்தில் ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாகவும், இணை இயக்குநராகவும் பணியாற்றிய "வீட்டில விஷேசம்" என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. இப்படம் குறித்தும் தனது கை வரிசையை காட்டி இருக்கின்றார் ப்ளூ சட்டை மாறன்.

வழக்கம் போல தன்னுடைய ஸ்டைலில் "வீட்டில விசேஷம்" என்ற திரைப்படத்தையும் விமர்சித்து இருந்தார் ப்ளூ சட்டை மாறன். இதனால் ஆத்திரமடைந்த ஆர்.ஜே.பாலாஜி ஒரு வீடியோவின் மூலம் பதிலடி கொடுத்திருக்கின்றார்.

https://twitter.com/RJ_Balaji/status/1539231150224289792

அவ்வீடியோவில்"திரையரங்க உரிமையாளர்கள் பலரும் இப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்து வரும் வரவேற்பு பற்றி சிறப்பாக பேசியிருப்பதோடு, இந்தப் படம் யாருக்காக எடுத்துள்ளமோ அவர்களுக்கு பிடித்தால் மட்டும் போதும் எந்த நீல சட்டைக்கும் இப்படம் பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை " என்று அதிரடியாக ஆர்.ஜே.பாலாஜி கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement