• Oct 16 2024

சிங்கிள் டீயுடன் இட்லி கடைக்கு அப்டேட் கொடுத்த நித்யா மேனன்! இது புதுசா இருக்கே..

Aathira / 3 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்டு திகழும் தனுஷின் 52 வது படம் தான் இட்லி கடை. இந்த படத்தை தனுஷே இயக்கி நடிக்க உள்ளார். சமீபத்தில் வெளியான ராயன் படம் தனுஷின் ஐம்பதாவது படமாக அமைந்ததோடு மிகப்பெரிய வெற்றியையும் அவருக்கு பெற்றுக் கொடுத்தது.

பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான தனுஷ் அதன் பின்பு ராயன் படத்தையும் அவரே இயக்கி நடித்திருந்தார். தற்போது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் இயக்கி வருகின்றார். இந்த படத்தில் இருந்து வெளியான கோல்டன் ஸ்பேரோ பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து குபேரா, இளையராஜாவின் பயோபிக், இட்லி கடை என தனுஷ் கைவசம் ஏராளமான படங்கள் காணப்படுகிறது.

இந்த நிலையில், தனுஷ் இயக்கி நடிக்க உள்ள தனது 52வது படத்தில் நித்தியாமேனன் இணைந்துள்ளதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உறுதி செய்துள்ளார். அத்துடன் இந்த படம் தொடர்பான அறிவிப்பும் விரைவில் வெளியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.


இட்லி கடை படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. தனுஷின் வுண்டர் பால் நிறுவனமும் இவ் படத்தை தயாரிக்கின்றது. இதற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கின்றார். படத்தின் படப்பிடிப்பு தேனியில் நடைபெற்று வருகின்றது.

இந்த படத்தில் நடிகர் தனுஷ் உடன் நித்யா மேனன், சத்யராஜ், ராஜ்கிரண், அருண் விஜய் மற்றும் ஷாலினி பாண்டே ஆகியோர் நடித்து வருகின்றார்களாம். சமீபத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் தொடர்பான வீடியோ ஒன்று இணையதளத்தில் லீக் ஆகி வைரலாகி இருந்தது.


Advertisement