• Apr 27 2024

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் எஸ்.ஜே.சூர்யா.இவர் ஒரு நடிகர் மாத்திரமல்லாது இயக்குநராகவும் பட்டையை கிளப்பி வருகின்றார்.மேலும் இவர் எந்த கதாபாத்திரத்தை கொடுத்தாலும் ஏற்று நடிக்கும் இயல்பு கொண்டவராவார்.

இவருடைய இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் வாலி மற்றும் குஷி ஆகிய படங்கள் ஆரம்பத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றது.தொடர்ந்து அன்பே ஆருயிரே,மகாநடிகன்,கள்வனின் காதலி போன்ற திரைப்படங்களில் ஹீரோவாக நடித்தார்.

இருப்பினும் அவ்வளவு வெற்றி வாய்ப்பினை வழங்கவில்லை. இதனால் சில வருடங்கள் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்த சூர்யா மீண்டும் வில்லனாக நடிக்கத்தொடங்கினார்.அவருடைய வில்லன் அவதாரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

அண்மையில் இவருடைய வில்லன் கதாபாத்திர நடிப்பில் வெளியான மாநாடு,டான் ஆகிய திரைப்படங்கள் மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்ட ரோலாக விளங்குகின்றது.

இந்த நிலையில் எஸ் .ஜே .சூர்யா முக்கிய வேடத்தில் நடித்த திரைப்படம் பொம்மை. பிரபல இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

மேலும் எஸ் .ஜே .சூர்யா ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இந்தப்படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது.இதோ…

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement