• May 04 2024

அஜித் பைக் டூர் செல்லும் இடங்கள் குறித்து வெளியாகிய புதிய அப்டேட்- அடடே இதை யாரும் எதிர்பார்க்கலையே

stella / 1 year ago

Advertisement

Listen News!

அஜித்தின் மேனேஜர் தன் டுவிட்டர் பக்கத்தில் அஜித் பைக் ரைட் செய்யும் பயணத் திட்டத்திற்காக மேப்பை அதிகாரப்பூர்வாக வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் ஆரம்பகாலங்களில் காதல் மன்னனாக இருந்து வந்த நடிகர் தான் அஜித்.இவர் தனது நடிப்பினாலும் இயல்பான நடையினாலும் ரசிகர்கள் பலரைக் கவர்ந்தார். இவரது நடிப்பில் இறுதியாக வலிமை என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது.

இதனைத் தொடர்ந்து மீண்டும் எச். வினோத்துடன் இணைந்து ஏ.கே 61 என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தையும் வலிமை பட தாயாரிப்பாளரான போனிகபூர் தான் தயாரித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பானது ஒரு புறம் நடந்து கொண்டிருந்தாலும் அஜித் உலகச்சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகின்றார்.


அதன் படி தற்பொழுது ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இருந்தார். தற்பொழுது இந்திய மாநிலங்கள் மற்றும் இடங்களுக்கு அவர் தற்போது பைக்கில் பயணம் செய்து வருகிறார்.அதன்படி மணாலி, சார்ச்சு, லேஜ்,  நூர்பா, வேலி, பாங்காங்,. கார்கில், ஸ்ரீ நகர், ஜம்மு, சட்டிஷர், ஹரித்துவார், ரிசிகேஷ், கீதார் நாத், பத்ரி நாத் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்றுள்ளார்.

  விரைவில் அஜித் இப்பயணத்தை முடித்து படப்பிடிப்பு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகிறது.மேலும் அஜித்தின் மேனேஜர் தன் டுவிட்டர் பக்கத்தில் அஜித் பை ரெட் செய்யும் பயணத் திட்டத்திற்காக மேப்பை அதிகாரப்பூர்வாக வெளியிட்டுள்ளார். பயணம் சென்ற  இடங்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement