• May 05 2024

யுவன் சங்கர் ராஜா ஸ்ரூடியோவில் இயக்குநர் செல்வராகவன்- நானே வருவேன் படத்தின் புதிய அப்டேட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நானே வருவேன் திரைப்படத்தின் இறுதிக் கட்டப் பணியில் மும்முரமாக இறங்கிய இயக்குநர் செல்வராகவன்

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் தான் செல்வராகவன். இவர் புதுப்பேட்டை திரைப்படத்திற்கு பிறகு தனுஷை வைத்து நானே வருவேன் என்னும் திரைப்படத்தை இயக்கி வருகின்றார்.இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.


இப்படத்தின் படப்பிடிப்புக்கள் யாவும் நிறைவடைந்துள்ளதோடு படத்தை செப்டம்பர் 29-ம் தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. இந்த நிலையில் படத்தின் இறுதி கட்டப் பணிகளை முடிக்கும் வேளையில் இயக்குநர் செல்வராகவன் இறங்கியுள்ளார்.


அதில் டப்பிங் மற்றும் எடிட்டிங் வேலைகளை முடித்த செல்வராகவன், தற்போது யுவன் சங்கர் ராஜாவுடன் பின்னணி இசை கோர்ப்பு பணியில் இணைந்துள்ளார்.

யுவன் சங்கர் ராஜா ஸ்ரூடியோவில் பின்னணி இசை கோர்ப்பு வேலையில் இருக்கும் புகைப்படத்தை  வெளியிட்டுள்ளார் .மேலும் பின்னணி இசைக்காக Maestro வுடன் பணியாற்றுகிறேன் எனவும் தெரிவித்திருக்கிறார்.  நானே வருவேன் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.







Advertisement

Advertisement

Advertisement