• May 05 2024

வெந்து தணிந்தது காடு படத்தின் ரன்னிங் டைம் என்ன தெரியுமா? யு /ஏ சான்றிதழும் கிடைத்து விட்டதா?- குஷியான ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!


வெந்து தணிந்தது காடு படத்திற்கு யு /ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரமாக நியமிக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம்  வருபவர் தான் சிம்பு. இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய மாநாடு திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு 100 கோடிக்கு மேல் வசூல் சாதனையும் செய்தது. இப்படத்தைத் தொடர்ந்து  பத்து தல,  வெந்து தணிந்தது காடு ஆகிய இரு படங்களிலும் பிஸியாக நடித்து வருகின்றார்.


இதில் வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பானது முடிவடைந்ததோடு படத்தின் திரையிடும் வேலைகளில் படக்குழுவினர் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர்.சமீபத்தில் இந்த படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது.


 கேங்க்ஸ்டார் கதைக்களத்தைக் கொண்டதாக கூறப்படும் இந்த படத்தை வேல்ஸ் இன்டர்நேஷ்னல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். இதன் முதல் பாகம் செப்டம்பர் 15ஆம் தேதி திரைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த படத்தில் நாயகியாக சித்தி இத்னானி, நாயகனின் அம்மாவாக ராதிகா சரத்குமார் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் தணிக்கை சான்றிதழ் குறித்த தகவலும் வெளியாகி உள்ளது. வெந்து தணிந்தது காடு படத்திற்கு யு /ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரமாக நியமிக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.


Advertisement

Advertisement

Advertisement