• Apr 27 2024

ஜெயம் ரவியின் சைரன்’ படத்திலிருந்து வெளியாகிய புதிய அப்டேட்- இரண்டு ஹுரோயின்கள் நடிக்கிறாங்களா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் ஜெயம் ரவி இறுதியாக பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அகிலன் என்னும் படத்திலும் நடித்து வருகின்றார். இப்படம் விரைவில் வெளியாகக் காத்திருக்கின்றது. இதனை அடுத்து ஜெயம் ரவி நடிக்கும் புதிய படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது இரும்புத்திரை, விஸ்வாசம், ஹீரோ ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகி வரும்  ‘சைரன்’ என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்தில் தான் ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.


பிரம்மாண்டமாக தயாராகும் இப்படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரித்து வருகிறார்.இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் அனுபமா என இரு கதாநாயகிகள் நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தில் யோகிபாபு, சமுத்திரகனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 


ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு செல்வகுமார் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.  இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் பூஜையுடன் தொடங்கியது. இதையடுத்து தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஜெயம் ரவி நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement

Advertisement