• Apr 27 2024

பாரதி கண்ணம்மா புகழ் நடிகரின் ஆசை மனைவி திடீர் மரணம்-அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பாரதி கண்ணம்மா கனா காணும் காலங்கள்-2 உள்ளிட்ட சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகர் பாரத் கல்யாணின் மனைவி பிரியதர்ஷினி திடீரென காலமானார்.

இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் தனது 43வது வயதில் மரணமடைந்துள்ளார்.


அத்தோடு `பிரியா கடந்து மூன்று மாதங்களாகவே உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பேலியோ டயட் ஃபாலோ பண்ணதால டயாபடிக் வந்துடுச்சு. அதுக்காக ட்ரீட்மென்ட் எடுத்துட்டு வந்தாங்க. உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாங்க.  கோமாவிலேயே கொஞ்ச நாள் இருந்தாங்க. இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு இறந்திருக்காங்க. 


இவரது இறுதி சடங்கு நாளை காலை 11 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



பரத் கல்யாண் பிரியா தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது .இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டதோடு பலரும் இதற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement