சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்று விஜய் டிவி. இந்த தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் என ரசிகர்களால் விரும்பி பார்க்கப்பட்டு ரி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னிலை வகித்துவிடும்.
இவ்வாறுஇருக்கையில் மக்களை வெகுவாக கவர்ந்த சீரியலில் ஒன்றுதான் பாரதி கண்ணம்மா. ஆனால் தற்போது இந்த சீரியல் ஜவ்வு போல் இழுத்துக் கொண்டு செல்வதால் ரசிகர்கள் மத்தியில் போரடிக்க தொடங்கிவிட்டது.
அதேபோல் பாக்கியலட்சுமி சீரியலில் ஆரம்பத்தில் நன்றாக சென்று கொண்டு இருந்த நிலையில் கோபி சிக்காமல் தொடர்ந்து தப்பித்து வருவது சீரியல் மீதான சலிப்பை அதிகரித்து வருகின்றது.
மேலும் இந்த நிலையில் விஜய் டிவியில் அடுத்து புதியதாக பாரதிதாசன் காலனி என்ற பெயரில் சீரியல் ஒன்று ஒளிபரப்பாக உள்ளது. விரைவில் இந்த சீரியல் ஒளிபரப்பாக இருப்பதாக ப்ரமோ வீடியோ வெளியாகியுள்ளது.
ப்ரமோ வீடியோவை பார்த்த ரசிகர்கள் பாசிட்டிவாக இருப்பதாக இதேபோல் சீரியலும் பாசிட்டிவ் ஆக இருந்தால் நன்றாக இருக்குமென கூறி வருகின்றனர்
ஆனாலும் சிலர் பாரதி கண்ணம்மாவிற்கே இன்னும் பதில் தெரியல இதுல பாரதிதாசன் காலனி வரையா எனவும் கிண்டல் அடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
- தமிழ் பிக்பாஸ் டைட்டிலை மிஸ் செய்து தெலுங்கு Non Stop டைட்டிலை தட்டிச்சென்ற பிரபல நடிகை-குவியும் வாழ்த்துக்கள்..!
- திடீரென மும்பைக்கு பறந்த அடித்த சூர்யா மற்றும் ஜோதிகா
- “மனைவிக்கு மட்டும் தான் தெரியும்” – உண்மைகளை கூறிய சிவகார்த்திகேயன்…!
- அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து வருத்தும் ரசிகர்கள்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!